LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

மழையுடனான வானிலை தொடரும்!

June 8, 2026 · Tamil Ceylon LK

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், மேலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம், திடீர் காற்று மற்றும் மரக்கிளை முறிவு போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

மேலும் ›