LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உலகம்

இலங்கை நோக்கி சென்ற கடத்தல் வலையமைப்புக்கு அதிரடி நடவடிக்கை!

June 22, 2026 · Tamil Ceylon LK

தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 லட்சம் இந்தியா ரூபா மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தவிருப்பதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, பொலிஸார் மண்டபம் வடக்கு துறைமுக கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். 

அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த ஒரு இடத்தை சோதனை செய்த போது, அங்கு 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மா்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இவற்றை இலங்கைக்குக் கடத்த மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

மேலும், கைப்பற்றப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 45 லட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனா். 

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் பொலிஸாா் ஒப்படைத்தனா்.

Related Stories

மேலும் ›