LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

ஜனாதிபதி செயலாளருடன் ‘Buddhist Tzu Chi Merit’ அமைப்பு சந்திப்பு!

June 26, 2026 · Tamil Ceylon LK

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும், Buddhist Tzu Chi Merit Organization (Singapore) Ltd அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு Buddhist Tzu Chi Merit அமைப்பின் பங்களிப்பை வழங்குதல், எதிர்வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ நிலைமையின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் தொண்டு நிறுவன வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக Buddhist Tzu Chi Merit அமைப்பின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பின்போது குறிப்பிட்டனர்.

இலங்கையைப் பாதித்த ஒவ்வொரு இயற்கை அனர்த்தங்களின் போதும் Buddhist Tzu Chi Merit Organization (Singapore) Ltd அமைப்பு தனது ஆதரவை வழங்கியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதியின் செயலாளர், ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக நல வேலைத்திட்டங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர, Clean Sri Lanka செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில செனரத், பணிப்பாளர் (சமூக) எல். ஏ. எஸ். சி. ராஜகருணா, பணிப்பாளர் (தொண்டர் சேவை) எச். பி. எஸ். சாந்த, இலங்கை பராமரிப்புக் குழுவின் தலைவர் (Sri Lanka care team lead) கெங் லிம் (Keng Lim) மற்றும் உறுப்பினர் சிம் செம் பிங் (Sim Sem Ping) உள்ளிட்ட Buddhist Tzu Chi Merit அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Stories

மேலும் ›