LATEST
சிறைக்குள் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!டெங்கு தாக்கம் அதிகரிப்பு – உயிரிழப்புகளும் உயர்வு!ஈரானுக்கு எதிராக புதிய பாரிய பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை!25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கை அவசியம்!சட்டத்தரணிகள் சங்க விவகாரம்: சபையில் சூடான விவாதம்!அரசியல்வாதிகளுக்கு பணம் செலவழித்தது எப்படி? ஷிரான் பாசிக் நீண்ட வாக்குமூலம்!சிறைக்குள் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!டெங்கு தாக்கம் அதிகரிப்பு – உயிரிழப்புகளும் உயர்வு!ஈரானுக்கு எதிராக புதிய பாரிய பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை!25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கை அவசியம்!சட்டத்தரணிகள் சங்க விவகாரம்: சபையில் சூடான விவாதம்!அரசியல்வாதிகளுக்கு பணம் செலவழித்தது எப்படி? ஷிரான் பாசிக் நீண்ட வாக்குமூலம்!
உள்ளூர்

25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!

August 20, 2026 · Tamil Ceylon LK

2026 ஆம் ஆண்டுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹெர ஊர்வலத்தின் இரண்டாவது கும்பல் பெரஹெர நேற்று (19) இரவு வீதியுலா வந்தது. 

இலங்கை கலாச்சாரத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் 1716 ஆவது தலதா பெரஹெர ஊர்வலத்தின் இரண்டாவது கும்பல் பெரஹெர நேற்று மாலை 6.41 மணிக்கு அமைந்த சுப வேளையில் தனது வீதியுலாவை ஆரம்பித்தது. 

25 வருடங்களுக்குப் பின்னர் இரண்டாவது கும்பல் பெரஹெரவில் புனித தந்த தாதுவை சுமந்து செல்லும் பாக்கியம் தலதா மாளிகையின் ‘ஜனராஜா’ யானைக்குக் கிடைத்தது. 

இதன்போது அதன் இருபுறமும் ‘மியன் ராஜா’ மற்றும் ‘சிங்க ராஜா’ ஆகிய யானைகள் அணிவகுத்துச் சென்றன. 

தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான இந்தப் பெரஹெர, நான்கு மகா தேவாலய பெரஹெரக்களையும் உள்ளடக்கி லேக் வீதி, தலதா வீதி, டி.எஸ்.சேனநாயக்க வீதி வழியாக ராஜா வீதியினூடாக மேல்நோக்கிச் சென்று மீண்டும் மாளிகையை வந்தடைந்தது. 

மூன்றாவது கும்புல் பெரஹெர இன்று (20) இரவு வீதியுலா வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›