LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உள்ளூர்

இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் ரூ.33 ட்ரில்லியனை நெருங்கியது!

September 2, 2026 · Tamil Ceylon LK

பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரக் கடன் அறிக்கையின்படிஇ 2026 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் கிட்டத்தட்ட 33 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

2026 ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி மொத்தப் பொதுக் கடன் 32.977 ட்ரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

இது மார்ச் மாத இறுதியில் 32.233 ட்ரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்இ இரண்டாம் காலாண்டில் சுமார் 744 பில்லியன் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ரூபா அடிப்படையில் கடன் அதிகரித்திருந்தாலும்இ அமெரிக்க டொலர் மதிப்பில் கணக்கிடும் போது கடன் அளவு குறைந்துள்ளது.

இதன்படி,மார்ச் மாத இறுதியில் 102.27 பில்லியன் டொலராக இருந்த வெளிநாட்டுக் கடன்இ ஜூன் மாத இறுதியில் 97.95 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.

மத்திய அரசாங்கத்தின் கடன் 31.999 ட்ரில்லியன் ரூபாயாகஅதிகரித்துள்ளது.

இதில் உள்நாட்டுக் கடன் 19.203 ட்ரில்லியன் ரூபாயாகவும்இ வெளிநாட்டுக் கடன் 12.796 ட்ரில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இருதரப்பு கடன் வழங்குநர்களில் சீனா 5.01 பில்லியன் டொலர்களுடன் தொடர்ந்து முதலாவதாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜப்பான் 2.27 பில்லியன் டொலர்களுடனும்இ இந்தியா 853.9 மில்லியன் டொலர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Related Stories

மேலும் ›