LATEST
பாடசாலைகள் திறப்பு – டெங்கு தடுப்புக்கு விசேட நடவடிக்கை!வறட்சி தீவிரம் – ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!யாழ். கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி!பூட்டான் தலைவர்களுடன் பிரதமர் ஹரிணி முக்கிய பேச்சுவார்த்தை!இலங்கை விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம்!இன்று நண்பகல் இலங்கையின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்!NPP ஆட்சிக்கு இரண்டு ஆண்டுகள் – ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் உரை!பாடசாலைகள் திறப்பு – டெங்கு தடுப்புக்கு விசேட நடவடிக்கை!வறட்சி தீவிரம் – ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!யாழ். கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை கடத்தலுக்கு முற்றுப்புள்ளி!பூட்டான் தலைவர்களுடன் பிரதமர் ஹரிணி முக்கிய பேச்சுவார்த்தை!இலங்கை விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம்!இன்று நண்பகல் இலங்கையின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்!NPP ஆட்சிக்கு இரண்டு ஆண்டுகள் – ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் உரை!
உலகம்

லிண்ட்சே கிளான்சி வழக்கில் நீதிமன்ற அதிரடி உத்தரவு!

September 5, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண்; மீதான கொலை வழக்கில், அறங்கூருநர்கள் ஒரு முடிவுக்கு வர முடியாததால் நீதிபதி நீதிமன்ற விசாரணையை ரத்து செய்யும் உத்தரவை அறிவித்துள்ளார்.

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 36 வயதான முன்னாள் செவிலியரான லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.

பிரசவத்திற்குப் பிந்திய கடுமையான மனநலப் பாதிப்பு காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை மனநலப் பாதிப்பின் அடிப்படையில் குற்றமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.

கிளான்சிக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் திட்டமிட்டே தன் குழந்தைகளைக் கொன்றதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்வது குறித்து அரசு தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை.

எனினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிளான்சி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Stories

மேலும் ›