LATEST
இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் இணைப்பு!நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!இங்கிலாந்து T20 தொடரில் குசல் மெண்டிஸ், பிநுர இல்லை!டெங்கு மரணங்கள் 72 ஆக உயர்வு!இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் இணைப்பு!நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!இங்கிலாந்து T20 தொடரில் குசல் மெண்டிஸ், பிநுர இல்லை!டெங்கு மரணங்கள் 72 ஆக உயர்வு!
உலகம்

நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!

September 5, 2026 · Tamil Ceylon LK

நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட பாரிய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒன்பது நாட்கள் கடந்துள்ள நிலையிலும், சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திரிசூலி நீர்மின்சாரத் திட்ட சுரங்கப்பாதையில் இருந்து வெள்ளிக்கிழமை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையிலேயே மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதே சுரங்கப்பாதையில் மற்றொருவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 39 பேர் வரை அதே சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

திடீர் வெள்ளம் காரணமா, நேபாளத்தில் இதுவரை 1,287 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5,083 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத் பகுதியில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 531 பேரைக் காணவில்லை. ஒட்டுமொத்தமாக இந்தப் பேரிடரில் 1,311 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேறும் பாறைகளும் நிரம்பியுள்ளதாலும், வெள்ள நீர் மட்டம் இன்னும் அதிகமாக இருப்பதாலும் சுரங்கப்பாதைகளுக்குள் நுழைவதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›