LATEST
அனோஜன் விடுதலையே இலக்கு; ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு கோரும் தமிழரசுக் கட்சிஹபீப் ரிஃபான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு!அனோஜனை மீட்க அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!266 ஓட்ட இலக்கைத் துரத்திய இலங்கை 176 ஓட்டங்களுக்கு சுருண்டது!தற்போதைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா!ஒரே வாரத்தில் ப்ரென்ட், WTI விலைகள் கடுமையாக குறைந்தன!நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!அனோஜன் விடுதலையே இலக்கு; ஜனாதிபதியுடன் நேரடி பேச்சு கோரும் தமிழரசுக் கட்சிஹபீப் ரிஃபான் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்பு!அனோஜனை மீட்க அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!266 ஓட்ட இலக்கைத் துரத்திய இலங்கை 176 ஓட்டங்களுக்கு சுருண்டது!தற்போதைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா!ஒரே வாரத்தில் ப்ரென்ட், WTI விலைகள் கடுமையாக குறைந்தன!நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை!
உள்ளூர்

அனோஜனை மீட்க அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

September 24, 2026 · Tamil Ceylon LK

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் Anthony V. Pirnot ஆகியோரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், சன்முகம் குகதாசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் விடுதலை தொடர்பாகவும், அவரை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட முயற்சிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரத் தேவையை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.

Related Stories

மேலும் ›