LATEST
22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்22வது திருத்தத்தால் அரசாங்கத்தில் சிறிய பிளவு – பிமல் ரத்நாயக்க22வது திருத்தத்திற்கு எதிராக கருப்பு உடையில் பாராளுமன்றம் வந்த SJB எம்.பிக்கள்!வங்கி, வாகனம், நிலப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு TIN அவசியம்!முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான வரி பத்திர சேவை தற்காலிக நிறுத்தம்இலங்கை வெற்றியால் தீர்மானப் போட்டியாக மாறிய இறுதி ஒருநாள் போட்டி!ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!விவசாயிகளுக்காக மேலும் ரூ.1,800 மில்லியன் நட்டஈடு வழங்க திட்டம்!பலத்த மழையால் ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகள் மூடல்
உலகம்

ட்ரம்பின் ஊடகத் தடைக்கு எதிராக CNN உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நீதிமன்ற நிவாரணம்!

September 25, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்டிருந்த அணுகல் அனுமதியை இரத்து செய்திருந்த நிலையில், அந்தத் தடையை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

வொஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி டிம் கெல்லி பிறப்பித்த உத்தரவில், குறித்த ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு உடனடியாக மீண்டும் வெள்ளை மாளிகை செய்தியாளர் அனுமதிச் சீட்டுகளை வழங்குமாறு ட்ரம்ப் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்தத் தடையை அமுல்படுத்துவதை 14 நாட்களுக்கு அமெரிக்க நிர்வாகம் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஊடக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடை அமெரிக்க அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கக்கூடும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, செய்தி நிறுவனங்களின் செய்தி வெளியீட்டு அணுகுமுறை அல்லது ஆசிரியர் நிலைப்பாடு தொடர்பான காரணங்களுக்காக ஊடகவியலாளர்களின் அணுகலைத் தடுக்க முடியுமா என்பது தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

செப்டம்பர் 18ஆம் திகதி ட்ரம்ப் நிர்வாகம் குறித்த ஊடக நிறுவனங்களுக்கு தடை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து CNN, MS NOW மற்றும் Politico ஆகியவை செப்டம்பர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்தத் தடை தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

Related Stories

மேலும் ›