LATEST
சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.
விளையாட்டு

பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.

September 26, 2026 · Tamil Ceylon LK

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான தீர்மானமிக்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். 

இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பட்லருக்கு தொடை தசைப்பிடிப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்தும் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் (Dan Lawrence) இங்கிலாந்து அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். 

லோரன்ஸ், சொமர்செட் அணிக்கு எதிரான கவுண்டி சேம்பியன்ஷிப் போட்டிக்கான சர்ரே அணியில் இடம்பெற்றிருந்தார். 

ஆனால் தற்போது அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (26) நடைபெறும் பயிற்சிப் போட்டியில் அணியுடன் இணையவுள்ளார். 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற அடிப்படையில் சமனிலையில் உள்ளன. 

அதனடிப்படையில் நாளை இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›