LATEST
சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.சுற்றுலா வளர்ச்சியில் இலங்கை உலகளவில் முன்னேற்றம் பதிவு.மின் கட்டணம் எப்போது குறையும்? அமைச்சர் அநுர கருணாதிலக விளக்கம்5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் Bus Lane திட்டம் தீவிரம்!கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் இணைக்கப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்ய கோப் குழு நடவடிக்கை.பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்.பட்லருக்கு பதிலாக டேன் லோரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்ப்பு.
உள்ளூர்

5 பாதுகாப்பு மையங்களில் 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

September 27, 2026 · Tamil Ceylon LK

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 104 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. 

கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று (27) காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் 943 குடும்பங்களைச் சேர்ந்த 3,495 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், இந்தச் சூழ்நிலையினால் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சீரற்ற வானிலையால் 02 வீடுகள் முழுமையாகவும் 448 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன், 05 பாதுகாப்பு மையங்களில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

நிலவிய பலத்த மழை காரணமாகக் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், அம்மாவட்டத்தில் 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தில் 688 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 473 பேரும், மாத்தறையில் 383 பேரும், புத்தளத்தில் 310 பேரும், கேகாலையில் 224 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›