LATEST
கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!தமிழ் கட்சிகளின் கூட்டு முடிவு! ஜனாதிபதியை சந்திக்க உத்தியோகபூர்வ கோரிக்கைபாராளுமன்ற வரப்பிரசாதத்தை தவறாக பயன்படுத்தினாரா?எல்லை நிர்ணய ஆணைக்குழு வெற்றிடங்களுக்கு புதிய நியமனம்!30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்!கொழும்பு பொது நூலகத்தில் சிறப்பு விருந்தினராக சசி தரூர்!கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!தமிழ் கட்சிகளின் கூட்டு முடிவு! ஜனாதிபதியை சந்திக்க உத்தியோகபூர்வ கோரிக்கைபாராளுமன்ற வரப்பிரசாதத்தை தவறாக பயன்படுத்தினாரா?எல்லை நிர்ணய ஆணைக்குழு வெற்றிடங்களுக்கு புதிய நியமனம்!30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்!
உள்ளூர்

அமைதிப் போராட்டத்திற்கு தடை : ஹட்டன் நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை

March 8, 2026 · Tamil Ceylon LK

இன்று டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலை முன்னிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனைத் தடுக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று பணியாளர்களால் குறித்த பெண்ணின் உடல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் கனபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் குழந்தைவேல் ரவி, ஹட்டன் நகர சபை பிரதி நகரபிதா பெருமாள் சுரேந்திரன் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பிற தொடர்புடையவர்களுக்கு எதிராகவே இந்த நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›