இன்று முதல் உயரும் பேருந்து கட்டணம்
இன்றைய தினம் பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள......
Published March 22, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்றைய தினம் பேருந்து கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பல தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை, பேருந்து கட்டணங்களை குறைந்தபட்சம் 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் டீசல் விலை 31 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.