பிரதமர் பதவி நீக்கப்படுவாரா? டில்வின் சில்வா கருத்து.
நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில்...
Published September 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி நீக்கப்படுவார். எனும் வதந்திகளை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்தார்.
“முன்னதாக, ஹரிணி அமரசூரிய தனது அமைச்சர் பதவியை இழப்பார் என்று கூறினர்கள், இப்போது அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறுகின்றனர். இவை அவர்களின் கனவுகளே தவிர வேறு ஒன்றும இல்லை” என்று அவர் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருகின்றது, ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.