மெக்சிகோவில் விபத்து : 10 பேர் பலி
மெக்சிகோவில் இரண்டு தட்டு பேருந்து ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் விபத்து
Published September 9, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மெக்சிகோவில் இரண்டு தட்டு பேருந்து ஒன்றின் மீது புகையிரதம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது 10 பேர் பலியாகியுள்ளதுடன், 61 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவின் வடமேற்கே உள்ள அட்லகோமுல்கோ நகரில் நேற்று புகையிரத கடவையில் சிக்கிய இரண்டு தட்டு பேருந்து மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவினர், பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.