LATEST
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!தமிழ் கட்சிகளின் கூட்டு முடிவு! ஜனாதிபதியை சந்திக்க உத்தியோகபூர்வ கோரிக்கைபாராளுமன்ற வரப்பிரசாதத்தை தவறாக பயன்படுத்தினாரா?எல்லை நிர்ணய ஆணைக்குழு வெற்றிடங்களுக்கு புதிய நியமனம்!30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்!4 ஆண்டுகளாக நிலுவைத் தொகை! யூபுன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்!ஜனாதிபதி மாளிகைகளில் யார் தங்கினர்? கணக்காய்வில் அதிர்ச்சி தகவல்!கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் டெங்கு வெடிப்பு!தமிழ் கட்சிகளின் கூட்டு முடிவு! ஜனாதிபதியை சந்திக்க உத்தியோகபூர்வ கோரிக்கைபாராளுமன்ற வரப்பிரசாதத்தை தவறாக பயன்படுத்தினாரா?எல்லை நிர்ணய ஆணைக்குழு வெற்றிடங்களுக்கு புதிய நியமனம்!30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்!4 ஆண்டுகளாக நிலுவைத் தொகை! யூபுன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உள்ளூர்

நாளை முதல் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை!

April 19, 2026 · Tamil Ceylon LK

ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் அங்கொன்று இங்கொன்றுமாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான காலநிலை நிலவும்.

மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories

மேலும் ›