இந்தியா அணி அசத்தலான வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு
Published September 11, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதின.
இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 13.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் குல்திப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், சிவம் டூபே 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதன்படி, 58 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.