LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
விளையாட்டு

இந்திய T20 அணியில் தலைமை மாற்றம்!

June 6, 2026 · Tamil Ceylon LK

அண்மையில் இந்திய அணிக்கு 3ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்று தந்து வரலாற்று சாதனை படைத்த போதிலும், சூர்யகுமார் யாதவ் இந்திய இருபதுக்கு 20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டமைக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) முதன்மை தேர்வாளர் அஜித் அகர்கர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

35 வயதான சூர்யகுமார் யாதவ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமன்றி, அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குழாமிலும் சேர்க்கப்படவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக சூர்யகுமார் யாதவின் ஆட்டத்திறன் (Form) எதிர்பார்த்த அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அஜித் அகர்கர், 2025 ஜனவரி 1 முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் அவர் விளையாடிய 35 போட்டிகளில் வெறும் 702 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளதாகவும், இதனால் அவரின் சராசரி 26 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் இருபதுக்கு 20 போட்டிகளில் 43.60 ஆக இருந்த அவரது துடுப்பாட்ட சராசரி, 2024 ஜூலையில் தலைவரான பிறகு 25.88 ஆகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பிந்தைய இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை கருத்திற் கொண்டு, அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான சிறந்த வழி இதுவே எனத் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அஜித் அகர்கர், உலகக் கிண்ணத்தை வென்று தந்த ஒருவருடன் இத்தகைய விவாதத்தை நடத்துவது எளிதான காரியம் அல்ல என்றும், இது ஒரு கடினமான முடிவு என்றாலும் அணியின் எதிர்கால நலனைக் கருதியே எடுக்கப்பட்டதுடன் இது குறித்து சூர்யகுமாரிடம் தாம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய இருபதுக்கு 20 தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›