LATEST
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!நாமல் ராஜபக்ச வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தாக்கம்!நீர்கொழும்பு சிறை வன்முறைக்கு பிறகு முக்கிய முடிவு!விவசாய அமைப்புகளுக்கு பாராளுமன்ற அனுமதி மறுக்கப்பட்டதா? சூடுபிடித்த விவாதம்!டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டிய காலம்!TIN இலக்கத்தை ஆன்லைனில் பெறலாம்சீனி மோசடி முறியடிப்பு: களஞ்சியசாலை முகாமையாளர் கைது!சட்டவிரோத மீன்பிடியை தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!நாமல் ராஜபக்ச வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தாக்கம்!நீர்கொழும்பு சிறை வன்முறைக்கு பிறகு முக்கிய முடிவு!விவசாய அமைப்புகளுக்கு பாராளுமன்ற அனுமதி மறுக்கப்பட்டதா? சூடுபிடித்த விவாதம்!டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டிய காலம்!TIN இலக்கத்தை ஆன்லைனில் பெறலாம்சீனி மோசடி முறியடிப்பு: களஞ்சியசாலை முகாமையாளர் கைது!
Uncategorized

சில மாவட்டங்களில் மழை; பல இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும்

July 7, 2026 · Tamil Ceylon LK

நாட்டின் சில பகுதிகளில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலையே நிலவவுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›