பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தாக்கம்!

டெங்கு நோய் அபாயச் சூழல் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் எடுத்துள்ளதுடன், மாணவர்களுக்கான விரிவுரைகள் இணையவழியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வுகளில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழகம், வரும் 21ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என மேலும் தெரிவித்துள்ளது.
Follow & Share




