இலங்கை வானிலை முன்னறிவிப்பு!

இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடற்பிராந்தியங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
. மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow & Share




