LATEST
வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!
உள்ளூர்

பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!

August 10, 2026 · Tamil Ceylon LK

நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மூலம் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று இனம் காணப்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பின் போது சுமார் 25, 482 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்களுள் சந்தேகத்தின் அடிப்படையில் 461 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்பு உடையவர்கள் என 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

குறிப்பாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 231 பேரும் இதில் அடங்குவர். திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 116 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டனர். 

மேலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய 78 சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன், பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய 89 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், போக்குவரத்து சட்டங்களை மீறிய மற்றும் வேறு குற்றச் செயல்களுக்காக 3,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›