LATEST
காலி முகத்திடல் அருகே மர்ம சடலம்!பயணிகளுடன் ஆபத்தான பேருந்து பந்தயம்!சமயமும் கலாச்சாரமும் இணையும் பெல்லன்வில பெரஹெரா!இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள்!‘அஸ்வெசும’ நிதி மோசடி குறித்து விசேட கவனம்!உலக நம்பர் 1 இடத்திற்கான போட்டி தீவிரம் – ரூமேஷ் vs வெபர்!இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் சவால்கள் – மத்திய வங்கி எச்சரிக்கை!இராணுவ சிப்பாய்க்கு புதிய இல்லம் – புத்தூரில் கையளிப்பு!காலி முகத்திடல் அருகே மர்ம சடலம்!பயணிகளுடன் ஆபத்தான பேருந்து பந்தயம்!சமயமும் கலாச்சாரமும் இணையும் பெல்லன்வில பெரஹெரா!இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள்!‘அஸ்வெசும’ நிதி மோசடி குறித்து விசேட கவனம்!உலக நம்பர் 1 இடத்திற்கான போட்டி தீவிரம் – ரூமேஷ் vs வெபர்!இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் சவால்கள் – மத்திய வங்கி எச்சரிக்கை!இராணுவ சிப்பாய்க்கு புதிய இல்லம் – புத்தூரில் கையளிப்பு!
உள்ளூர்

‘அஸ்வெசும’ நிதி மோசடி குறித்து விசேட கவனம்!

August 16, 2026 · Tamil Ceylon LK

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் தணிக்கைக் குழு ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் இந்தத் தணிக்கை நடத்தப்படவுள்ளது.

இதில் நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள ‘அஸ்வெசும’ பயனாளிகளின் நிதி மோசடி குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

மேலும், ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டமை, கொரோனா அசாதாரண சூழ்நிலைக் காலத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சமூர்த்தியின் ஊடாக வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு, சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் உரிய பயனாளிகளுக்குச் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இந்தத் தணிக்கையின் போது ஆராயப்படவுள்ளது.

தணிக்கைப் பணிகள் தொடங்குவதற்கு முன்னர், இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை தங்களிடம் வழங்குமாறு பயனாளிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

மேலும் ›