LATEST
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!
உள்ளூர்

மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

August 24, 2026 · Tamil Ceylon LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

மேலும் ›