நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆய்வு மையத்தின் தகவலின் படி, இக்கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், அவ்வப்போது கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் .
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளிலும் அலைகளின் உயரம் சுமார் 2.0–2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது .
Follow & Share




