LATEST
பெயர் மாற்ற சர்ச்சை – குற்றச்சாட்டை நிராகரித்த அர்ஜுன மகேந்திரன்!“மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி” என மைத்திரிக்கு கௌரவம்!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி உயர் நீதிமன்றத்திற்கு?விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரவி கைது!பாண் விலை மீண்டும் உயர்கிறது!95 பெட்ரோல் ரூ.475 ஆக குறைப்பு!குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!வாக்குமூலம் அளிக்க ஆஜரான ரவி!பெயர் மாற்ற சர்ச்சை – குற்றச்சாட்டை நிராகரித்த அர்ஜுன மகேந்திரன்!“மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி” என மைத்திரிக்கு கௌரவம்!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி உயர் நீதிமன்றத்திற்கு?விசாரணைக்கு ஆஜரான நிலையில் ரவி கைது!பாண் விலை மீண்டும் உயர்கிறது!95 பெட்ரோல் ரூ.475 ஆக குறைப்பு!குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு!வாக்குமூலம் அளிக்க ஆஜரான ரவி!
உள்ளூர்

95 பெட்ரோல் ரூ.475 ஆக குறைப்பு!

August 31, 2026 · Tamil Ceylon LK

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. 

இதற்கமைய, ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். 

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையும் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். 

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாமல் இருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இதனிடையே, சினோபெக் (Sinopec) நிறுவனமும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பெற்றோல் விலைகளை திருத்தியமைத்துள்ளது. 

இதற்கமைய, சைனோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›