LATEST
5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகள் வெளியாகின்றனமுற்றிலும் மாற்றப்படவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணி!மருத்துவ அறிக்கை கோரிய கொழும்பு கோட்டை நீதவான்!159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்!செல்சீயிலிருந்து மென்செஸ்டர் சிட்டிக்கு என்சோ பெர்னாண்டஸ்!24 மணிநேரம் தடைப்படும் நீர் விநியோகம் – பகுதிகள் அறிவிப்பு!பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகள் வெளியாகின்றனமுற்றிலும் மாற்றப்படவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணி!மருத்துவ அறிக்கை கோரிய கொழும்பு கோட்டை நீதவான்!159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் புகார்!செல்சீயிலிருந்து மென்செஸ்டர் சிட்டிக்கு என்சோ பெர்னாண்டஸ்!24 மணிநேரம் தடைப்படும் நீர் விநியோகம் – பகுதிகள் அறிவிப்பு!பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பேராசிரியர்கள் போராட்டம்!
விளையாட்டு

முற்றிலும் மாற்றப்படவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணி!

September 2, 2026 · Tamil Ceylon LK

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். 

முதல் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. 2 ஆவது டெஸ்டில் 150 ஓட்டங்களுக்கும் மேல் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரை உடனடியாக நாடு திரும்ப கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் சல்மான் ஆகா, அலி உஸ்மான், ஆமீர் ஜமால், அவைஸ் ஜாஃபர், குர்ரம் ஷேசாத் ஆகியோரை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

ஐந்து அறிமுக வீரர்களை 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்த்துள்ளது. இதில் சிலர் விசா கிடைத்தால்தான் இங்கிலாந்துக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளனர். 

வீரர்களை தவிர்த்து தலைமை பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சாளர் பயிற்சியாளர்களான சர்பராஸ் அகமது மற்றும் உமர் குல் ஆகியோரையும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான வீரர்கள் தேர்வு கமிட்டி பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி முற்றிலுமாக சீரமைக்கப்பட இருக்கிறது. 

இதற்கிடையே இந்தியாவின் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்சா போக்லே, நம்ப முடியாததைச் செய்வதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை நம்பலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு தொடர் முடிவடைவதற்கு முன்னதாகவே பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›