ஹோர்முஸ் மோதல்: உலக எண்ணெய் விலை உச்சம்!

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணையில் நடந்து வரும் மோதல்களால், உலகளாவிய எண்ணெய் விலை கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, உலகளாவிய அளவுகோலான ப்ரெண்ட் ரச மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றிக்கு 97 டொலராக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீதமும், கடந்த மாதத்தில் 19 சதவீதமும் அதிகமாகும். WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்க்கு 92.27 டொலராக அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மூன்று ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கியது. பதிலுக்கு ஈரானின் புரட்சிக்கர காவல்படையும், மூன்று கப்பல்கள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களைத் தாக்கியுள்ளது.
சவூதி அராகோவின் ஜிலான் (Jizan) சுத்திகரிப்பு நிலையம் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளதால் எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.கடந்த 10 நாட்களில் தினசரி சராசரியாக 10 கப்பல்கள் மட்டுமே இதைக் கடந்து சென்றுள்ளன.
இதேவேளை,அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் சராசரி விலை 4.15 டொலராக அதிகரித்துள்ளது.
ஈரானுடனான போர் தொடங்கிய பின்னர், இது 39% அதிகமாகும்.
சாதனை அளவாக ஒரு கேலன் டீசல் விலை 5.90 டொலரைக் கடந்துள்ளது.
இதன் காரணமாக அமொிக்காவில் நுகர்வோர் வாங்கும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




