LATEST
24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!24 ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டம்!ரஷ்யா–வட கொரியாவை இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறப்பு!இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் விசா வசதி இழப்பு – விஜித ஹேரத்!சுமணரத்ன தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்!38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில்!கொள்கை வகுப்பில் இளைஞர்களுக்கும் இடம் வேண்டும் –MP சாணக்கியன்!பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% மட்டுமே!வெளிநாட்டு வேலைவாய்ப்பில் “வேலை மாஃபியா” – சஜித் குற்றச்சாட்டு!
உலகம்

அமெரிக்கா–இஸ்ரேல் போரின் மத்தியில் ஈரானில் உள்நாட்டு அதிரடி!

September 8, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் அரசு தனது நாட்டில் சிறு ஆயுதக் குழுக்களின் கைது நடவடிக்கைகள் மற்றும் எல்லை மோதல்கள் குறித்த தகவல்களைத் தீவிரமாக வெளியிட்டு வருகிறது.

இதன் மூலம், போரை ஒரு “தேசியப் பாதுகாப்புப் போராட்டமாக” (national security struggle) சித்தரித்து. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது கட்டுப்பாட்டை வெளிப்படுத்த ஈரான் முயற்சிப்பதாக செய்தி ஊடகம் ஒன்று கூறுகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடந்த நாடு தழுவிய போராட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறி, “ஜனாதிபதி எதிர்ப்பு” மற்றும் “ராணுவ ஆட்சியாட்சி ஆதரவு” குழுக்களைச் சேர்ந்தவர்களை, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கைது செய்தது.

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதிகளில் ஈராக் எல்லையை ஒட்டி குர்திஷ் ஆயுதக் குழுக்கள் (PJAK, PDKI, PAK) செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு அவை திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் தென்கிழக்கு எல்லைப் பகுதிகளில் பிரிவினைவாத பலோச் போராளிக் குழுவான ‘ஜெய்த் அல்-அத்ல்’ (Jaish al-Adl) பாதுகாப்புப் படையினருடன் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் குறித்த ஆயுதக்குழுக்களையும் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈரானிய படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, 100% பணவீக்கம் மற்றும் போர் அழுத்தம் காரணமாக மக்கள் மீண்டும் வீதிக்கு வந்து போராடுவார்கள் அல்லது அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என்று அமெரிக்கா நம்புவதாக செய்தி ஊடகம் கூறுகிறது.

எனினும் அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு எதிரான திட்டங்களை வகுத்துள்ளதாக ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›