LATEST
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க FCID சென்ற கோட்டாபய!சாம்பியன்ஸ் லீக்கில் கேப்டனான 19 வயது யமால்!அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!கொங்கோவின் புகாவு நகரை உலுக்கிய தீ விபத்து!நாமல் விவகாரம் குறித்து சர்வதேச அமைப்பை நாடிய மிலிந்த!2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!பொதுப் போக்குவரத்தில் மக்களின் நம்பிக்கையை உயர்த்த அரசு திட்டம்!தனியார் வாகனப் பயன்பாட்டை குறைக்க புதிய மெட்ரோ பேருந்து திட்டம்!மிக் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க FCID சென்ற கோட்டாபய!சாம்பியன்ஸ் லீக்கில் கேப்டனான 19 வயது யமால்!
உள்ளூர்

2027 முதல் அனைத்து சிம் பயனாளர்களுக்கும் முழு அடையாளச் சரிபார்ப்பு!

September 11, 2026 · Tamil Ceylon LK

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாகச் சிம் அட்டைகள் தொடர்பாக ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார். 

நேற்று (10) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், பொலிஸ் போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. 

அந்த நிறுவனங்களுடன் இணைந்து சிம் விதிமுறைகளைப் புதுப்பித்து, குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து — பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் — புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும். 

இது தொடங்கப்பட்ட பின்னர், 2027 ஆம் ஆண்டில் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளர்களுக்கும், அதாவது வாடிக்கையாளரை அடையாளம் காண்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும். 

நாட்டிலுள்ள சட்டவிரோதச் செயல்பாடுகளுக்குச் சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 

நாட்டில் சுமார் 3 கோடி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சேவைத் தரம் குறைவாக இருப்பதாக அந்த மக்களிடமிருந்து வரும் ஒரு முறைப்பாடாகும். 

தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே நாங்கள் இயங்கி வருகிறோம். அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›