சூப்பர் 4 சுற்றின் இறுதி ஆட்டம்: இந்தியா – இலங்கை மோதல்.
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இறுதி ஆட்டத்தில்...
Published September 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இறுதி ஆட்டத்தில் இன்று இரவு இந்தியா – இலங்கை அணிகள் துபாயில் மோதுகின்றன.
ஆசிய கோப்பை T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்றைய போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதற்கமைய, வருகின்ற 28 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.