இந்திய – ரஷ்ய நட்புறவு பாதிக்காது.
இந்தியாவுடனான அமெரிக்க உறவு, ரஷ்யாவுடனான இந்திய...
இந்தியாவுடனான அமெரிக்க உறவு, ரஷ்யாவுடனான இந்திய நட்புறவைக் கெடுக்கும் என்பதற்கான எந்த சாத்தியங்களும் இல்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மிகவும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தம் நாட்டு நலனை முன்னிறுத்தி தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் இராணுவம், தொழில்நுட்பம், வாணிபம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் கூட்டு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் போன்ற அமைப்புகளிலும் சகாப்த நட்புடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மசகு எண்ணெய் வாங்குவது இந்தியாவின் உரிமை எனவும், தங்களுக்குத் தேவையான வணிக கூட்டாளிகளை தேர்வு செய்வதில் இந்தியா தன்னாட்சி கொண்ட நாடாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.