புதிய அமைச்சுக்களில் அமைச்சர்கள் – விசேட வர்த்தமானி அறிவிப்பு.
அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்தின் கீழ், மூன்று...
அரசின் முதல் அமைச்சரவை மாற்றத்தின் கீழ், மூன்று அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்ட நிலையில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அனுர கருணாதிலகவிடம் இருந்து நீக்கப்பட்ட வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் பதவியில் இல்லாத கௌசல்ய அரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர, எம்.எம்.ஐ. அர்காம் உள்ளிட்டோர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.