நல்லூர் கந்தசுவாமி தேர்த் திருவிழா.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழாவின்...

Published August 21, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 24ஆம் நாள் திருவிழா இன்றாகும்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *