ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்காக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில்,ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்ற வழக்கு தினத்தில் நீதிமன்றம் சார்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும், அதற்குப் பொறுப்பான நபர்கள் யார், அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் திகதியன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நீதவான் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.