LATEST
மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!
உள்ளூர்

பெண்ணின் தங்கச் சங்கிலியை திருடிய நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

November 3, 2025 · Tamil Ceylon LK

யாழ்ப்பாணம் – நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை நபர் ஒருவர் அறுத்து சென்ற நிலையில், அந்நபரை நாவற்குழி பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்வது போல் வருகை தந்த குறித்த நபர், அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

அத்தோடு, மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார்.

இதனையடுத்து வர்த்தக நிலையத்திலிருந்த சி.சி.டிவி கெமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதன்போது சந்தேக நபரிடமிருந்த 3 இலட்சம் ரூபாய் பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சந்தேகநபர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் எனவும், சிறைத் தண்டனை பெற்று ஒருவாரத்துக்கு முன்னரே விடுதலையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related Stories

மேலும் ›