கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள்
Published November 3, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரமவும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.