LATEST
மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!மத்திய மாகாணத்தில் 35 உட்பட 38 பாடசாலைகள் இன்று இயங்காது!கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு!அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – பலர் காயம்!இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை – ஆனால் மழை நிலை தொடரும்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் விலக தீர்மானம்

November 4, 2025 · Tamil Ceylon LK

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜோனதன் ட்ரோட் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இதனை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய கிரிக்கெட்டில் பயிற்சி மாற்றங்கள் இயல்பானதாகும் என்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்கிறது. அணிகள் உருவாகுவது போலவே, அவர்களின் தலைமை மற்றும் மூலோபாயத் தேவைகளும் உருவாகின்றன.

எந்தவொரு சர்வதேச அணியும் எப்போதும் ஒரே பயிற்சியாளரின் கீழ் இருக்காது, மேலும் நீண்டகால இலக்கை நோக்கி கட்டமைக்கப்படுவதால் இந்த மாற்றம் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் ஏற்படுத்துவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

18 மாத காலப்பகுதிக்கு அவரது பதவி காலம் வழங்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அது நீடிக்கப்பட்டிருந்தது.

ட்ரோட்டின் பதவிகாலத்தில் 43 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 20 போட்டிகளிலும் 61 சர்வதேச டி-20 போட்டிகளில் 29 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›