LATEST
பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!பிரதம நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் – உடனடி விசாரணை கோரிக்கை!மனித உரிமைகள், நல்லாட்சி குறித்து இலங்கையிடம் EU எதிர்பார்ப்பு!நீர் திட்டத்தை மீள ஒப்படைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!இறுதிச் சடங்கிற்கு தயாரான குடும்பம் – உயிருடன் வந்த நபர்!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – மனுவில் வலியுறுத்தல்!குறைந்த வருமான குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புதிய கல்வி உதவி!உள்நாட்டு அரிசி உபரி இருக்க இறக்குமதி ஏன்? – சஜித் கேள்வி!ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதில் பிரச்சினையில்லை!
பல்சுவை

நடிகர் அபிநய் காலமானார்

November 10, 2025 · Tamil Ceylon LK

2002ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அபிநய். அதன்பின், ஜங்ஷன், சிங்கார சென்னை, சக்சஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

43 வயதான அபிநய்க்கு, கல்லீரல் தொற்று பிரச்சனை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உயிரை காப்பாற்ற ரூ. 28 லட்சம் தேவைப்படுவதாக தகவல் வெளிவந்த நிலையில், KPY பாலா, நடிகர் தனுஷ் போன்றவர்கள் உதவி செய்தனர். இதன்பின் ஓரிரு சினிமா நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4 மணியளவில் அவர் காலமானார்.

நடிகர் அபிநய்க்கு உறவினர்கள் என பெரிதாக யாரும் இல்லை என கூறப்படுகிறது. ஓரிரு நண்பர்கள் மட்டுமே அவருக்கு உதவியுள்ளனர். தற்போது அபிநய்யின் இறுதி சடங்கு செய்வதற்கு கூட யாரும் இல்லாமல் இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.

Related Stories

மேலும் ›