கைதி- 2 இல்லையா?

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி-லோகேஷ் இருவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின்

Published August 23, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி-லோகேஷ் இருவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சமீபத்தில், லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்து அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ரஜினி, கமலை இணைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் இறங்கி இருப்பதால் கார்த்தியின் கைதி 2 படம் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

இதனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த படத்தில் நடிக்க திட்டமிட்ட கார்த்தி தற்போது கைதி 2 படத்தின் கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்து விட்டாராம்.

இதன் காரணமாக சுந்தர்.சி, கார்த்தி இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers பல்சுவை and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *