பிரதேச சபையின் தவிசாளர் உட்பட ஐவருக்கு பிணை!
வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம்
Published November 26, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட நால்வர் இன்று (25) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.