கொழும்பில் பல வீதிகளுக்கு போக்குவரத்து தடை
மோசமான காலநிலை காரணமாக கொழும்பில் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக
Published November 28, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மோசமான காலநிலை காரணமாக கொழும்பில் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பகுதியில் மரங்கள் விழுந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளனர்.
பின்வரும் வீதிகள் தற்போது தடைப்பட்டுள்ளன.
-
பிரேமசிறி கேமதாச மாவத்தையில் உள்ள லயனல் வெண்ட் தியேட்டர் அருகே கெப்பெட்டிபொல மாவத்தை
-
நான்காவது வாயில் அருகே தேசிய வைத்தியசாலை
-
எல்விடிகல மாவத்தை
-
குயின்ஸ் வீதி சந்திப்பு
-
கோவிலுக்கு அருகே உள்ள கொட்டாஞ்சேனை ஆமர் வீதி