பேராதனையில் மண்சரிவு: 23 இற்கும் மேற்பட்டோர் பலி!
சீரற்ற வானிலை காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை (28) பேராதனை, சரசவிகம பிரதேசத்தில்
Published November 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சீரற்ற வானிலை காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை (28) பேராதனை, சரசவிகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில், 23 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மண்சரிவினால் 10 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன.
இதன் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.