ஜனவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி!

2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய

Published February 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

2026 ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ஜனவரி மாதத்தில் 2.4% வரை குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2025 டிசம்பர் மாதத்தில் 4.4% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பிரிவின் பணவீக்கம், 2026 ஜனவரி மாதத்தில் 3.4% ஆகக் குறைந்துள்ளது.

அதேநேரம், 2025 டிசம்பர் மாதத்திற்கான உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 1.6% ஆகக் காணப்பட்டதுடன், 2026 ஜனவரி மாதத்திலும் அதே 1.6% என்ற மட்டத்தில் மாற்றமின்றித் தொடர்கிறது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *