LATEST
நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு ஆகஸ்ட் 18இல் 22வது திருத்தம் நாடாளுமன்றத்தில்!சிறைச்சாலை சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க விசேட கலந்துரையாடல்!வடக்கை புதிய தெங்கு உற்பத்தி மண்டலமாக மாற்றும் பாரிய திட்டம்!விமானங்கள் நேருக்கு நேர் நெருங்கியதால் சிட்னி விமான நிலையத்தில் பரபரப்பு!நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் – புதிய எண்ணிக்கை வெளியானது!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!
உலகம்

அமெரிக்க வரி விதிப்பு – சீனா பதிலடி.

October 12, 2025 · Tamil Ceylon LK

“நாங்கள் போராட பயப்படவில்லை. எதிர் நடவடிக்கை எடுப்போம்” என அமெரிக்காவின் 100 சதவீத வரி அறிவிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக நேற்று (11) ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவம்பர் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

– இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கிறது. எதிர் நடவடிக்கை எடுப்போம்.

அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு சீனாவின் நலன்களுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கிறது. இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையைப் பலவீனப்படுத்துகிறது. சீனா போராட விரும்பவில்லை. ஆனால் போராட பயப்படவில்லை.

அமெரிக்கா தனது போக்கில் தொடர்ந்தால், சீனா அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›