வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி கைது

Published November 25, 2025 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இஸ்ரேலிய தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கை தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக, அப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்காரவும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *