தங்கத்தின் விலையில் அதிகரிப்பு!
தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்றுடன்
Published November 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று (25) தங்கத்தின் விலை ரூபாய் 6000 இனால் அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று காலை கொழும்பு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூபாய் 309,200 ஆக அதிகரித்துள்ளது.
இதன் நேற்றைய விலை ரூபாய் 303,600 ஆக இருந்தது.
அத்துடன் நேற்று ரூபாய் 330,000 ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை இன்று ரூபாய் 336,000 ஆக அதிகரித்துள்ளதாக தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.