LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
உலகம்

மீண்டும் அதிகரிக்கிறது மசகு எண்ணெய் விலை!

April 6, 2026 · Tamil Ceylon LK

மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையை மீண்டும் ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

இன்று வர்த்தகம் ஆரம்பமான போது, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் (Brent Crude) ஒரு பீப்பாயின் விலை 2.2 சதவீதத்தால் அதிகரித்து, 111.43 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், WTI ரக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயின் விலை 2.7 சதவீதத்தால் உயர்ந்து, 114.57 டொலராகப் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியான போர் காரணமாக விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பானது எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories

மேலும் ›