LATEST
எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!எசல பெரஹேராவில் போதைப்பொருளுடன் காவடி குழுவினர் கைது!தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க முன் மக்களின் கருத்தைக் கேளுங்கள்!சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் விசாரணை!வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அரசு அடையவில்லை! கம்மன்பில குற்றச்சாட்டு.கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறு.விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!
உலகம்

ஈரான் – அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம்

April 8, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்கா தற்போது ஈரானுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும், ஈரானில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமானது மிகவும் ஆக்கபூர்வமான ஒன்றாக அமையும் எனத் தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அவர் பதிவு ஒ்ன்றை பதிவிட்டுள்ளார்.இந்த இணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக, ஈரான் இனிமேல் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலத்தடியில் மிகவும் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ள ஈரானின் அணுசக்தி சார் மூலப்பொருட்களை அகற்றுவதற்குத் தெஹ்ரானுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியிலிருந்து எதுவுமே மாற்றமடையவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஈரான் மீதான வர்த்தக வரிகள் மற்றும் தடைகளை நீக்குவது குறித்துத் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள 15 முக்கிய அம்சங்களில் பெரும்பாலானவற்றிற்கு ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது பிராந்திய அரசியலில் ஒரு பாரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

Related Stories

மேலும் ›