பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்!

நாட்டின் சில மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அதேநேரம், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow & Share



